.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அயனமண்டல மழைக்காடுகள் - சிறப்புத்தன்மைகள்

E-mail

அயனமண்டல மழைக்காடுகள் அதிக வெப்பம், அதிக மழை வீழ்ச்சி என்பன இவற்றின் விசேட காலநிலைத் தன்மைகள் எனலாம். அயனமண்டல மழைக்காடுகள் என்றும் வெப்பம் மிகுந்த பிரதேசங்களாகும். இவை 24 -31 பாகை செல்சியஸ் வருடாந்த வெப்பநிலையினை அனுபவிக்கும் பகுதிகளாகும். வருடம் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 2000 மி.மீட்டர் மழைவீழ்ச்சியினை இக்காடுகள் பெறுகின்றன. என்றும் பசுமையான அடர்ந்த உயர்ந்த மரங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகின் சில...

அயனமண்டல மழைக்காடுகள் நாள் ஒன்றிற்கு மூன்று சென்றி மீட்டர் மழையினைக்கூட பெறுகின்றன. அயன மழைக்காடு ஒன்றினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கமுடியும். கீழ் வளரிப்படை, இங்கு நிலத்தை அண்டிவளரும் தாவரங்கள் காணப்படும் ஒரு மழைக்காட்டில் மூன்று வீதமான சூரிய ஒளியை மட்டுமே இப்பகுதி அனுபவிக்கின்றது. எனினும் அதிகளவான ஈரப்பதனை கொண்டு காணப்படும் இப்பகுதியில் விதைகள் முளைப்பதும், படர்கொடிகள் பரவுவதும் அதிகமாகும்.

முதலாவது படையாகிய இங்கிருந்து வளரும் தாவரங்கள் இளம்பருவத்தை அடைந்ததும் மழைக்காட்டின் இரண்டாவது வலயத்தினை வந்தடைகின்றன. இவ்வலயயம் மூடுபடை அல்லது மேல் விதானம் என அழைக்கப்படும் இப்படை முழுதும் நெருக்கமான உயினப்பல்வகைமையினை கொண்ட பகுதியாகும். அதிகளவான மரங்களின் கிழைகள், இலைகள் இப்பகுதியில் காணப்படும். எனவே கிழைகள், இலைகளில் படரும் கொடிகள் மற்றும் அதிகளவான தாவர உண்ணி விலங்குகள் இப்பகுதிகளில் காணப்படும். மூன்றாவது படை வெளிப்படும் படையாகும் மிகவும் உயரமாக வளரும் தாவரங்கள் இப்பகுதியை வந்தடைகின்றன. இவை இரண்டாவது மூடுபடையினின்றும் சூரிய ஒளிக்கு போட்டியிட்டு வளரும் தாவரங்களை கொண்ட பகுதி. இங்கு பெரும்பாலும் தாவரங்கள் அடர்த்தி குறைந்தே காணப்படும்.

ஒரு மழைக்காட்டில் காணப்படும் தவரம் முதல் அத்தாவர இலைகளை வெட்டி வீழ்தும் சிறிய வண்டுகள், பூச்சிகள் முதற்கொண்டு நிலத்தில் வீழ்நத தாவர இலைகளை பிரிகையடைய வைக்கும் பக்டீரியாக்கள் வரை ஒவ்வொன்றும் அயன மழைக்காட்டுச் சூழல் தொகதியில் முக்கிய பங்கு வகிப்பவை.  உலகின் பெரிய அயன மண்டல மழைக்காடு தென் அமெரிக்காவின் அமேசன் காடாகும். அதிகளவான உயிர்ப்பல்வகைமை, தாவரப்போர்வை என்பனவற்றை கொண்ட அமேசன் மழைக்காடு இன்று பாரிய அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கின்றது. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்பு புவியியல் 14 வீதமான நிலப்பரப்பை மழைக்காடுகள் மூடியிருந்தன ஆனால் இன்று அது ஆறு வீதமாக குறைந்திருக்கிறது.

எனினும் இன்றைய புவியின் அரைவாசிக்கும் அதிகமான தாவர, விலங்குகளை கொண்ட பிரதேசமாக இப்பகுதிகளே கருதப்படுகின்றன. உதாரணமாக அயன மழைக்காட்டுப்பகுதியின் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 20 – 86 வரையான தாவர உண்ணி விலங்ககள் காணப்படும் என்கிறது ஓர் ஆய்வு. அனால் அயனமண்டல மழைக்காடுகள் அழிக்கப்படும் வேகம் அதிகமாகும். இன்றும் ஒவ்வொரு வினாடிக்கும் புவியில் ஒன்று தொடக்கம் ஒன்றரை ஏக்கர் மழைக்காடு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  மழைக்காடுகளின் பெறுமதியினை குறைத்து மதிப்பிடும் அரசுகள், பல்தேசிய கம்பனிகள் மற்றும் நிலச்சொந்தக்காரர்கள் குறுகியகால நலன்களுக்காக அதனை அழித்துவருகின்றனர்.

தொடரும் இவ்வாறான காடழிப்பினால் உலகின் அரைவாசி உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணங்கிகள் அழியும் அபாயத்தினை எதிர்நோக்கியிருக்கின்றன. அயன மழைக்காடுகளின் அழிவினால் நாம் ஒவ்வொரு நாழும் தாவரம், விலங்கு, பூச்சிகள் என 137 வரையிலான உயினங்களை இழந்துவருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 538
  • இணைக்கப்பட்டது: Sunday, April 25 2010 20:10 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 233
Last Updated on Saturday, May 29 2010 08:04  

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125974

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

We have 10 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday769
mod_vvisit_counterYesterday898
mod_vvisit_counterThis week3060
mod_vvisit_counterThis month7174
mod_vvisit_counterAll178751

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.