.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகின் பிரதான புல்நிலங்கள் இயல்பும் பரம்பலும்

E-mail

பரந்துபட்ட உயிரியல் சூழல்தொகுதியின் அடித்தளங்களை காப்பதிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மண்ணின் வளத்தினை பாதுகாப்பதிலும் உலக புல்நிலங்கள் அதி உன்னத இடத்தினை வகிக்கின்றன. அதிகளவான வெப்பமும் மிகவும் குறைவான படிவு வீழ்ச்சியினையும் கொண்ட பகுதிகள் வெப்பப்பாலைவனங்களாகவும், அதிக மழைவீழ்ச்சினை கொண்ட பகுதிகள் அடர் காடுகளாகவும் காணப்படும் அதேவேளை, கோடை வெப்பமும் குறைவான மிருதுவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்ற...

பகுதிகள் பெரும்பாலும் உலகில் புல்நிலங்களாக காட்சிதருகின்றன. அந்தவகையில் உலகின் 25 வீதமான நிலப்பரப்பை புல்நிலங்கள் மூடியிருக்கின்றது. இடத்திற்கு இடம் இவற்றின் பெயர்கள் வேறுபட்டுக் காணப்படினும் பொதுவாக மூன்று வகையான புல்நிலங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அதில் இரண்டு வகை இடை வெப்ப வலயத்திற்கு உரியது மற்றையது அயன மண்டலத்திற்கு உரியது. அயனமன்டல சவர்னா புல்நிலங்கள், இடைவெப்பவலய மிதமான புல்நிலங்கள என உலகின் புல்நிலங்களை பாரிய இரண்டு பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். வருடத்தின் பெரும்பகுதிக்கு வறட்சியான வெப்பமும் ஆறு தொடக்கம் எட்டு மாதங்கள் வரை 50 தொடக்கம் 130 சென்ரிமீட்டர் மழைவீழ்ச்சியும் கிடைக்கின்ற பகுதிகளில் அயனமண்டல சவர்ன புல்நிலங்கள் அமைந்து காணப்படுகின்றன. குறிப்பாக  ஆபிரிக்கா, ஆவுஸ்ரேலியா, தென் அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா பகுதிகளை குறிப்பிடலாம்.

பாலைவனங்களின் ஓரங்களிலும், காடுகளின் எல்லலைகளிலும் இவற்றின் அமைவிடம் நிர்நயிக்கப்படுகின்றது. இங்கு காணப்படும் மெல்லிய மண்படையானது இப்பகுதிகளில் புற்களும், சிறிய செடிகளும் வளர்வதற்கே உகந்து காணப்படுகின்றது. மண்ணிலும், காலநிலையிலும் வேறுபட்ட இச் சவர்னா பகுதிகள் புற்களிலும், அங்குவாழும் விலங்குகளிலும் பல்வேறுபட்ட உயிரின பல்வகைமையினை உருவாக்குகின்றது. இங்கு காணப்படும் வெப்ப, உலர் காலநிலை.

மற்றும் பருவகால வறட்சி என்பன இதற்கு சிறந்த உதாரணமாகும். பெருமளவான பகுதிகளில் புல்நிலங்கள் உயினங்களின் வாழ்வாதாரமாக பாதுகாக்கப்படுகின்றது. வேறுபட்ட பகுதிகளில் காடழிப்புக்கு உட்பட்ட பகுதிகளும் புல்நிலங்களாக மாறிவருகின்றன. ஆபிரிக்காவின் பெரும்பகுதியில் சவர்னா புல்நிலங்கள் பரந்து காணப்படுகின்றன. இப்பகுதிகளே உலகின் உயிரினச் செறிவு கொண்ட பகுதிகளாகவும் விளங்குகின்றன. வெப்பக்காலநிலை மற்றும் குளிர் காலநிலையினை கொண்டு அமைந்த பம்பஸ் புல்வெளிகள், ஸ்டெபிஸ் புல்வெளிகள் என இரு பிரிவுகளை கொண்டது இடைவெப்பவலய மிதமான புல்வெளிகள். பல நூறு வருடங்களுக்கு முன்பு பிரிகையாக்கமடைந்த பசளை மற்றும் கனியுப்புக்களை மிகையாகக் கொண்ட நிலங்களாக இவை இருந்ததனால் ஆரம்ப காலங்களில் விவசாயத்தின் பொருட்டு இப்புல்நிலங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டன.

ஒருகாலத்தில் வட அமெரிக்காவின் பெரும்பகுதியை இவை மூடியிருந்தன எனப்படுகின்றது. இவை அயனப்பகுதி சவர்னாவை காட்டிலும் குறைவான(25-90 செ.மீ) மழைவீழ்ச்சியினை பெறுவன. அதிகளவான ஈரப்பதனுடன் காணப்பகும் பகுதிகள், ஆழமான பகுதிகள், ஆற்றுப்பள்ளத்தாக்குகள் என வளமான மண்ணினை கொண்ட ஈரலிப்பான இப்பகுதிகளில் பம்பஸ் புல்நிலங்கள் விரவிக்காணப்படுகின்றன. ஆதலால் இன்று பெருமளவில் தானியச்செய்கை நிலங்களாகவும் இவை மாறிவருகின்றன. சராசரியாக 18 பாகை செல்சியஸ் வெப்பநிலை இப்பகுதிகளில் காணப்படுகின்றது. தென் அமெரிக்காவில் இவை அதிகளவில் காணப்படுகின்றன. அத்திலாந்திக் கடற்கரையில் இருந்து அந்திஸ் மலைவரைக்குமான 777,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்புல்நிலம் பரந்து காணப்படகின்றது. பெருமளவில் புதர்கள் ஆங்காங்கே வளர்ந்த மரங்களும் இப்புல்நிலங்களின் இடையிடையே விரவிக்காணப்படுகின்றது. ஸ்டெபிஸ் புல்நிலங்கள் பம்பல்ஸ் புல்நிலங்களை காட்டிலும் குறைவான மழைவீழ்சியினை பெறுவன. ஐரோப்பாவில் இவை பிரபல்யமானவை. மலை இடைகளுக்கு இடையேயும், நிலத்துண்டங்களின் நடுவிலும் அமைந்து காணப்படும் ஸ்டெபிஸ் புல்நிலங்கள் குறைவான மழைவீழ்சியினை பெறுபவை எனினும் குளிர் காலநிலையினை அனுபவிப்பன. இப்பகுதிகளில் ஒன்ரரை அடியில் இருந்து நான்கரை அடிவரை புற்கள் வளர்கின்றன.

மழைவீழ்ச்சியின் கிடைப்பனவு புற்களின் வளர்ச்சியை தீர்மானிக்கின்றது. அதிகளவான காற்றுக்கள், வளங்குன்றிய குளிர்ச்சியான நிலம் என்பன இப்பகுதியில் உயிரினச்செறிவினை கட்டுப்படுத்துகின்றது.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 149
  • இணைக்கப்பட்டது: Monday, July 26 2010 18:01 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 234
Last Updated on Wednesday, July 28 2010 12:01  

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125979

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உன்னுடைய செயலுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பது பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் நீ எதையும் செய்யாவிட்டால் உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

- மகாத்மா காந்தி


STUDY WITH US..

Who's Online

We have 7 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday784
mod_vvisit_counterYesterday898
mod_vvisit_counterThis week3075
mod_vvisit_counterThis month7189
mod_vvisit_counterAll178766

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.