தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சமூகத்தின் பாடசாலை: பாடசாலை சமூகமயமாக்கல்

E-mail

மாணவர்கள் சமூகத்துடன் பொருந்தி வாழ்வதற்கும் சமூக விதிகளையும் விழுமியங்களையும் பண்பாடுகளையும் உராய்வின்றி உள்வாங்கிக் கொள்வதற்குமுரிய அறிவாற்றல் கல்விச் செயன்முறையால் கையளிக்கப்படுகின்றது. கல்வியினால் விசைப்படுத்தப்படும் மனத்துள் வடிவமைக்கப்படும் செயன்முறையாக சமூகமயமாக்கல் விளங்குகின்றது. பாடசாலை...

பெரியபிரித்தானியாவின் ஸ்பென்ஸ் அறிக்கையில் பாடசாலை
என்பது அதனைச் சூழவுள்ள பரந்த சமூகத்துள் அதற்கெனவே விசேடமான ஒழுங்கமைப்பொன்றினைக் கொண்ட சிறியதொரு சமூக அலகு எனக் குறிப்பிடப்படுகின்றது. பாடசாலைகளை சமுதாய நிலையங்களாகக் கருதும் எண்ணக்கரு பழமையானது ஆயினும் புதுமை சேர்ந்தது.  1898இல் நயூயோர்க் சட்ட சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. "பொதுமக்களுக்கான கல்விக்கும் பொதுப்போக்குகள் பொதுமக்களின் நன்மைக்கு ஏதுவாகும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காகவும் பாடசாலையின் வளங்களைப் பிரயோகித்தல் வேண்டும். பாடசாலை சமூகம் தொடர்பாக ஜோர்ஜ்விலாட்

நீங்கள் கற்பிக்கும் பிள்ளைகள் எதிர்காலப் பிரஜைகளாவர். அவர்கள் சமுதாயத்தின் பிரதிவிம்பமாகும். சமுதாயத்தின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நன்கு உணர்ந்துகொள்ளும் அளவுக்கே நீங்கள் சிறந்த ஆசிரியராக மாறமுடியும்.

“ஆசிரியரது மாற்றமடைகின்ற நடிபங்கு” எனும் நூலில் குறிப்பிடப்படும் விடயம் "பாடசாலைக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான முனைப்பான நிறுவன வரையறைகள் நெகழ்வுடையனவாக இருத்தல் வேண்டும். அதனூடாக வளங்களும் அனுபவங்களும் இருபுறமாகவும் பிரகாசித்துச் செல்லல் வேண்டும். இதற்காக

  • சமூக மரபுகளை அறிதல்.
  • சமூகத்தளத்தில் மொழியின் தொழிற்பாடுகளை அறிதல். 
  • சமூக உணர்வுகளோடு ஒன்றித்தல்.
  • சமூகத்தில் நிலைபேறு கொண்டுள்ள கலைகள், சடங்குகள், எதிர்பார்ப்புக்கள் முதலியவற்றினை விளங்கிக் கொள்ளல். 
  • சமூகப்பாத்திரங்களை உராய்வுகளின்றி ஏற்று இயங்குதல். 
  • சமூக நிறுவனங்களின் தொழிற்பாடுகளோடு இசைவுகொள்ளல். 
  • வயதுக்குரிய நடத்தைகளோடு இணங்கிச் செல்லல். 
  • சமூக விளைவுகளை மீள் விளைவு செய்தல். 
  • சமூகத்தில் நிலவும் தொழிநுட்பக் கோலங்களோடு இணங்கி இடைவினை கொள்ளல். சமூகத்திலே தொழிற்படும் நாட்டார் மரபுகளை விளங்கிக்கொள்ளல்.
  1. சமுதாயப் பிரச்சினைகளை வளங்களை இனங்காணல்.
  2. பிரச்சினையைத் தீர்க்க உதவுதல்.
  3. பிற நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றல்.

பாடசாலைக்கும் சமுதாயத்துக்கும் இடையே நற்றொடர்பினைக் கட்டியெழுப்புதற்று கவனஞ்செலுத்த வேண்டிய விடயங்கள்:

ஓல்ஸன் என்பவர் சமுதாயப் பாடசாலைகளுக்கு மூலாதாரமாக அமையும் ஏழு எண்ணக்கருக்களை குறிப்பிட்டுள்ளார்

  1. சமுதாயப் பாடசாலைகள் தற்கால வாழ்க்கையின் பண்பை வளர்க்கின்றன.
  2. சமுதாயமானது பாடசாலையை கற்கைக்குரிய ஆராய்ச்சிக் கூடமாகப் பிரயோகிக்கின்றது.
  3. பாடசாலைக் கட்டடங்கள் சமுதாயத்தின் மைய நிலையமாகும்.
  4. சமுதாயப் பாடசாலையானது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் வாழ்க்கைக் கருமத்தொடரையும் ஒட்டியதாகப் பாடத்திட்டத்தை ஒழுங்கமைத்துக்  கொள்ளும்.
  5. பாடசாலையானது அதன் கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் திட்டமிடும்போது அதற்காகச் சமுதாயத்தைப் பிரயோகித்துக்கொள்ளும்.
  6. பாடசாலைகள் சமுதாய இணைப்பாக்கத்தில் பிரதான இடத்தைப் பெறுகின்றன.
  7. சமுதாயப் பாடசாலைகள் ஒவ்வொரு மனிதத் தொடர்பின் போதும் ஜனநாயகப் போக்கைக் கொண்டிருப்பதோடு அதனை விரிவுபடுத்துவதற்காகவும் கருமமாற்றுவனவாகும்.
  1. நீங்கள் உங்களது தொழில் தொடர்பாகப் பெருமை கொள்ள வேண்டும். ஆசிரியர் தொழில் மிக உயர்வானதொரு தொழில் என எண்ணாவிட்டல் ஆசிரியத் தொழிலை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
  2. பாடசாலையை விமர்சிக்க வேண்டாம்.
  3. மனிதத் தன்மையுடையவராய் இருங்கள்.
  4. சிறந்த ஆசிரியர் சமுதாயத்தை வகுப்பறையாகவும் ஆய்வு கூடமாகவும் பயன்படுத்திக் கொள்வார்.
  5. நீங்கள் உங்களது சமுதாயத்தில் பரிவு காட்டுங்கள். நீங்கள் சமுதாயத்துடன் இணைந்த ஓர் அம்சமாக மாறுதல் வேண்டும். சமுதாயம் தொடர்பான விளக்கத்pன் ஊடாகப் பிள்ளையைப் பற்றிய உணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதன் மூலம் சமூகத்தளங்களுடன் இசைந்தவகையில் உங்கள் சேவையும் பாடசாலையின் செயற்பாடுகளுடன் ஒன்றிய வகையில் சமூகமும் செயற்பட ஆரம்பிக்கும். எனவே பாடசாலையினையும் அது சார்ந்த சேவையினையும் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதன் மூலம் "பாடசாலை ஒரு சமூக நிறுவனம்" என்ற கருத்தினை மேலோங்கச் செய்யமுடியும்.

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Thursday, January 05 2012 13:28 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 451
Last Updated on Monday, March 12 2012 19:25  
கட்டுரையினை எழுதியவர்: SUTHAHARI M

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,