.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும்

E-mail

2015 புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அடைவதற்கு திட்டமிடப்பட்ட இலக்குகளில் பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்ற மூன்றாவது இலக்கு உள்ளமை குறிப்பிடத்தக்து. அது 2000 மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்றிருந்த 189 நாடுகள் இணைந்து உருவாக்கிய 2015 இல் அனைத்து நாடுகளும் அடைந்திருக்க வேண்டிய மனிதவள மேம்பாடு குறித்த...

எட்டு இலக்குகள் “புத்தாயிரமாம் ஆண்டு இலக்குகள்” எனப்படுகின்றன.

ஏனைய இலக்குகளை அடைவதற்கு 3 வது இலக்கினை முதலில் அடைவது இன்றியமையாதது எனப்பட்டது.


1.    பால்நிலை சமத்துவத்தினையும், பெண்கள் வலுவூட்டலினையும் நாட்டில் நடைமுறைப்படுத்தவுள்ள அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் உள்ளடக்கி திட்டங்களை அமைத்தல்.


2.    பொதுத்துறை, தனியார் துறை மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் என அனைத்து மட்டங்களிலும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் கருசனை காட்டல்.


3.    முடிவுகளை எடுத்தல் தீர்மானத்திற்கு வருதல் போன்ற உயர் பீடங்களில் பெண்களின் பிரசன்னத்தினை உறுதிப்படுத்தல்.
என்பன புத்தாயிரமாம் ஆண்டு இலக்கில் மூன்றாவது இலக்கினை அடைவதற்கு உலக நாடுகள் செய்ய வேண்டியவை என அப்போது தெரிவிக்கப்பட்டது.


அவற்றின் மூலம் பால்நிலை சமத்துவம் விரைவில் எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.


1.    நிதியியல் துறைகளில் குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்தல்


2.    குடித்தொகைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் குறிப்பாக கிராமிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளில் ஏற்படும் அபிவிருத்திகள் அங்கே பெண்களின் வேலைப்பழுவினை குறைப்பதுடன் அவர்களை நாட்டின் உயர்மட்ட பீடங்களுக்கு ஈர்ப்பதற்கான உந்து சக்தியாகவும் அமையும்.


3.    உள்நாட்டு சேவைகளை பெண்கள் இலுகுவில் பெறுவதனை உறுதி செய்வதும் வர்த்தகத்தில் பெண்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதும்.

இந்த மூன்று வழிமுறைகளின் மூலமும் பெண்களின் பொருளாதார ரீதியான வலுவூட்டலுக்கு உந்துசக்தி கொடுக்கப்படுவதுடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பும் அதிகரிக்க செய்ய முடியும் எனப்பட்டது.
அதன் மூன்றாவது இலக்காககிய பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்பது 7 அடிப்படை விடையங்களில் எதிர்பார்க்கப்பட்டது.


1.    பெண்களின் ஆரம்பக்கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.


2.    பிள்ளை பேற்றுக்கான சிறந்த சுகாதார வசதிகளையும் முடிவெடுப்பதற்கான தனிப்பட்ட உரிமையினையும் ஏற்படுத்தல்


3.    பெண்களின் அதிகளவான நேர விரையம் ஏற்படும் கிராமிய மட்டங்களில் காணப்படும் சில அடிப்படை தேவைகளை இலகுவில் பூர்த்தி செய்யக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வழங்கல்.


4.    பெண்களுக்கான சொத்து உரிமைகளை பெற்றுக்கொடுத்தலும் உறுதிப்படுத்தலும்.


5.    வேலை வாய்ப்புக்களில் பால்நிலை சமத்துவத்தினை உறுதிப்படுத்தலும்; பெண்களின் ஊதியங்களில் நியாயமான அதிகரிப்பினை வழங்குதலும்.


6.    பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடுகளை அதிகரித்தலும் அரசியலில் பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்தலும்.


7.    பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலும் பூரண சுதந்திரத்தினை நிலைநாட்டலும்.
இவற்றில் நான்கு குறிக்கோள்கள் பெண்களின் பொருளாதார வலுவூட்டலினை ஏற்படுத்துவதற்கான எண்ணக்கருக்களே. அவற்றிலும் இரண்டு நேரடியாகவே பொருளாதாரத்தில் பெண்களுக்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கூறுகின்றது.


ஐக்கிய நாடுகள் சபை பெண்களின் பொருளாதார வலுவூட்டலினை ஐந்து அடிப்படை விடையங்களின் ஊடாக அடைவதற்கு திட்டமிட்டது.


1.    பெண்களின் சொந்த ஆற்றலின் வலுவினை பயன்படுத்திக்கொள்ளல்


2.    தமது விருப்புக்களை தெரிவு செய்வதற்கும் பெறுவதற்குமான சுதந்திரம்.


3.    சந்தர்ப்பங்களையும் வளங்களையும் பெறுவதற்கும் அனுபவிப்பதற்குமான உரிமை.


4.    தமது சொந்த வாழ்கையினை குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிர்வகிப்பதற்கான உரிமைகளை பெறல்.


5.    தமது திறமைகள் மூலம் சமூக மாற்றங்களை உருவாக்கி அதன் மூலம் தேசிய சர்வதேச அளவில் சமூக பொருளாதார வலுவினை பெற்றுக்கொள்ளல்.


பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கான 3 அடிப்படை விடையங்கள்.


1.    பொருளாதாத்தில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல்


2.    சட்டப்படியான நில உரிமை, சொத்துரிமை என்பனவற்றினை வழங்குதல்.


3.    பொருளாதார உயர்மட்டங்களில் தீர்மானம் எடுத்தல், கொள்கை வரைபுகள் போன்ற துறைகளில் பெண்களையும் இணைத்தல்.

 

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 239
  • இணைக்கப்பட்டது: Sunday, November 29 2009 04:20 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 97
Last Updated on Tuesday, June 08 2010 20:32  

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
Content View Hits : 125069

Guest Book..

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,...
Wednesday, August 11 2010
Very NICE "உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
Tuesday, August 03 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, July 10 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

யாருடன் நாம் அதிக நேரத்தை செலவிடுக்கின்றோமோ நாளடைவில் நாம் அவர்களைப் போலவே ஆகிப்போகின்றோம்.

- வெற்றிக்கு


STUDY WITH US..

Who's Online

We have 17 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday239
mod_vvisit_counterYesterday642
mod_vvisit_counterThis week239
mod_vvisit_counterThis month4353
mod_vvisit_counterAll175930

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.