மூலம் காட்டல் வடிவம்

E-mail

இணையத்தில் பெற்றுக்கொள்ளும் கட்டுரைகளுக்கு ஆதாரம் காட்டுவது தொடர்பில் பொதுவான விதிமுறைகள் உண்டு. அவை உங்கள் கட்டுரைகளின் நம்பகத்தன்மையினை உறுதி செய்வதற்கான உத்திகளாகும். அந்த வகையில் தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகளை உங்கள் கல்வித் தேவையின் போது பயன்படுத்தினால் முடிவில் நீங்கள் எவ்வாறு ஆதாரம் குறிப்பிடவேண்டும் என்பது தொடர்பாக இப்பகுதி விளக்குகின்றது. இது இணைய கட்டுரைகளுக்கு பயன்படுத்தப்படும் பொதுவான விதி என்பதோடு அதனை எவ்வாறு தமிழில் கல்வி இணையம் தொடர்பில் பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • முதலில் கட்டுரை ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் அடுத்து ஒரு காற் புள்ளியிடவும். அது பின்வருமாறு அமையும்
  • ஆசிரியர்,
  • இரண்டாவதாக கட்டுரையாசிரியரின் பெயருக்கான முதல் எழுத்தினை குறிப்பிட வேண்டும். அது முற்றுப்புள்ளியுடன் முடிவடையும்.
  • ஆசிரியர்,ந.
  • மூன்றாவதாக கட்டுரை எழுதப்பட்ட திகதி அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட வேண்டும். முற்றுப்பள்ளியுடன் அதனை முடிக்க வேண்டும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3).
  • நான்காவதாக கட்டுரையின் தலைப்பு குறிப்பிடப்பட வேண்டும். அது முற்றுப் புள்ளியுடன் முடிக்கப்படும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3). கட்டுரையின் தலைப்பு.
  • ஐந்தாவதாக கட்டுரை பிரசுரமான வடிவம் வித்தியாசமான அடைப்புக் குறியினை பயன்படுத்தி காட்டப்பட வேண்டும். அது முற்றுப்புள்ளி இடப்பட வேண்டும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3). கட்டுரையின் தலைப்பு. [இணையம்].
  • ஆறாவதாக கட்டுரையினை பிரசுரித்த நிறுவனம் அல்லது இணையத்தின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். அடுத்து முற்றுப்புள்ளி ஒன்று இடப்பட வேண்டும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3). கட்டுரையின் தலைப்பு. [இணையம்]. இணையத்தின் பெயர்.
  • ஏழாவதாக கட்டுரை கிடைக்கும் இணையத்தின் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3). கட்டுரையின் தலைப்பு. [இணையம்]. இணையத்தின் பெயர். முகவரி: http://www.tamilnotes.com
  • அதனை தொடர்ந்து ஒரு இடை வெளி அளவில் கட்டுரையினை நீங்கள் பெற்றுக்கொண்ட திகதி வித்தியாசமான அடைப்புக்குறியினை பயன்படுத்தி குறிப்பிடப்பட வேண்டும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3). கட்டுரையின் தலைப்பு. [இணையம்]. இணையத்தின் பெயர். முகவரி: http://www.tamilnotes.com [2009, பங்குனி 4].
  • இறுதியாக முற்றுப்புள்ளி இட்டு நிறைவு செய்யவேண்டும்.
  • இப்போது ஒரு இணைய கட்டுரைக்கான திருப்திகரமான ஆதாரம் காட்டப்பட்டுள்ளது. அது கீழ் உள்ளவாறு அமைந்திருக்கும்.
  • ஆசிரியர்,ந. (2009,மாசி 3). கட்டுரையின் தலைப்பு. [இணையம்]. இணையத்தின் பெயர். முகவரி: http://www.tamilnotes.com [2009, பங்குனி 4].

உதாரணம் : தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரை ஒன்றிற்கு ஆதாரம் காட்டல் வடிவம்.

  • றதீஸ்,பா (2009,பங்குனி 3). இலங்கையின் காட்டுவளம். [இணையம்]. தமிழில் கல்வி. முகவரி: http://www.tamilnotes.com [2009, சித்திரை 3]

 

Last Updated on Friday, 01 January 2010 14:49  

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116111

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 5 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday185
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3339
mod_vvisit_counterThis month17990
mod_vvisit_counterAll150294

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.